இலக்கியம்


2 comments:

 1. நாங்கள் இழந்த ' வடுகச்சிமதில்' சுதந்திரம்....

  மூன்று பக்க குளங்கள்
  கரையெங்கும் காவல் தெய்வங்கள்
  பசும் புல் வெளிகள்
  பரந்த வயல் வெளிகள்

  வயது முதிர்ந்தும்
  வைராக்கியம் குறையாத...
  எங்கள் ஊர்ப் பெருசுகள்....
  பையனின் ஒரு புறம்
  நகரத்தில் திரிந்தாலும்....

  தாம்பு கயிறு எப்போதும் எங்கள்
  தந்தையரின் கையில்...
  ஐடி யில் இருந்தாலும்...
  ஐடென்டிடி யோடு இருந்தாலும்....
  தந்தையின் குரலுக்கு மதிப்பளித்து...

  ஏய் என்ற ஒரு குரலுக்கு...
  எந்திரிச்சு மதிப்புத் தரும்...

  தந்தையின் தாழ் பணிந்தே வாழும்...
  எங்கள் இளம் சிங்கங்கள்...

  இவர்களே எதிர் காலங்கள்...
  எங்கள் ஊரின் ' எதிர்கால' பெருசுகள்...

  சல சலக்கும் நீரோடைகள்
  சந்தியில் நடக்கும் சந்திப்புகள்...

  குல சாமி சன்னதிகளில் நடக்கும்
  குல விசாரிப்புகள்...

  எல்லோரும் சொந்தங்கள்...
  இனிமையாய் சுற்றங்கள்...

  நிலா ஒளி பாய்ச்சி எங்களை
  நிஜ வாழ்க்கை வாழ வைத்த
  நிலா ஒளி முற்றங்கள்...
  எங்கள் தட்டட்டிகள் தாலாட்டிய
  தங்க உறக்கங்கள்...

  எண்களின் தாய்மார்களின்
  தங்கமே கண்ணுறங்கு...
  'கண்ணான என் கண்ணே...
  நீ கவரி மான் பெத்த கண்ணோ'
  தாலாட்டு சங்கீதங்கள்....

  அம்மி அரைப்பாக...
  அரிசி புடைப்பாக...
  காலால் புழுங்கல் தள்ளி...
  காய வைக்கும் அதிசயங்கள்....

  எங்கள் அம்மா மார்...
  அத்தை மார்...
  அக்காக்கள் இணைந்து பேசும்...
  சாயங்காலச் சங்கதிகள்...
  அவைகளே இவர்களின்
  சங்கீதச் சந்தோசங்கள்....

  எட்டு கிலோ மீட்டர் சைக்கிள் மிதியில்...
  சென்று நாங்கள் களக்காட்டில் பார்த்த
  கோடு கோடாய்த் தெரிந்தும்...
  நாங்கள் கொண்டாடிய திரைப்படங்கள்...

  இன்று நினைக்கயிலே...
  எங்களின் உண்மைச் சுதந்திரம்...
  இத்தனை அனுபவம்
  தந்த...
  எங்களின்
  சொந்த ஊரான
  'வடுகச்சிமதிலில்'
  தானே இருந்தது...

  இன்று கார்களின் அணிவகுப்பும்...
  கரும்புகை வாசமும்...
  சில பல கட்டுகள் கரன்சியும்....
  எப்படித் தரும் இந்த சந்தோசங்கள்?
  நாங்கள் இழந்த சுதந்திரம்...
  எப்போ மீண்டும் வரும்?

  ReplyDelete
 2. 'வாலிபக் கவிதாஞ்சலி.....

  திருவரங்கத்துச் சீமான்
  உன் திரைப்பாடல்கள்
  கேட்டுத்
  திரை அரங்கங்கள்
  அதிர்ந்ததே....

  ஒரு தலைமுறை
  வாழ்ந்து மறைந்த
  உனக்கு....
  தமிழகத்தின் நான்கு
  தலைமுறைகள்
  தலை வணங்கியதே....

  வயோதிகக் கவிகள் இறந்தது கண்டோம்....
  வாலிபக் கவிஞன் நீ இறந்தது எங்கனம்?

  உன்னைத் தீ தீண்டிய பொழுதில்...
  தீயை அணைத்திட வேண்டி
  வானம் பொழிந்ததே...
  வற்றாமல் அழுததே...

  அத்தனை அரசியல் தலைகளோடும்...
  அன்பான நட்புண்டு உனக்கு....
  நட்பைக் கற்பைப் போல்
  எண்ணியவன் நீ....
  அதைக் கொண்டு காசு பணம்
  பார்த்ததில்லை நீ....

  ஓங்கி வளர்ந்தது உன் உருவம் மட்டுமல்ல...
  நீ தாங்கிப் பிடித்த தமிழும் தானே...

  இளம் கவிஞர்கள் பலரையும் ஊக்குவித்து...
  அவர் உயர்வு கண்டு வாழ்த்தி வரவேற்ற
  உன் பண்பாடு யாருக்கு வாய்க்கும்?

  அந்தப் பக்குவம் இனி எங்கு நீடிக்கும்???

  பொன்னிற மேனி...
  அது அணிந்திருக்கும்
  தகதக ஜிப்பா...

  அது உன்னைப் பகட்டாய்க் காட்ட அல்ல...
  தமிழை மரியாதையய்ப் பாதுகாக்க...

  யாருக்கும் நீ அடி பணிந்ததுமில்லை...
  அவமரியாதை செய்ததுமில்லை...

  உன் நாவில் தமிழ் நடனம் ஆடியது...
  உன் பேனா முனையில் தமிழ் சுவாசித்தது...

  பதினையாயிரம் பாடல்கள் புனைந்தும்...
  உனக்கு அளிக்கப் பட்ட பாராட்டெல்லாம்...
  தமிழுக்கு அளிக்கப் பட்ட பாராட்டாகத்....
  தலை வணங்கி ஏற்றவன் நீ....

  எப்போதும் வாழ்வில் நீ ஆட்டம் போட்டதுமில்லை...
  அழுது புரண்டதுமில்லை....

  வாழ்வாங்கு வாழ்ந்த வாலியே....
  அந்த லோகத்திலும் நீ நற்பேறு பெற்றிட...
  இறைவனை வணங்கி....
  இதனை இத்தோடு முடிக்கிறேன்....

  ReplyDelete